வெவ்வேறு திசைகளில் வாழும் நம் தமிழ் நண்பர்களின் சிறு சிறு கவிதைகள் இங்கு பகிர படுகிறது.
கார்காலமாய் உன் பனிபார்வை!
குளிர்காலமாய் உன் குரல்!
இலையுதிர்காலமாய் உன் பிரிவு!
வசந்தகாலமாய் உன் புன்னகை...
இலையுதிர்காலமே நிரந்தரம்
என்றாலும்,
குளிர்காலங்களை நினைவில் கொண்டு,
கார்காலங்களை தேடியபடி,
நான் இங்கு வசந்தகாலமாய் ..
உன் குரல் கேளாமல்
உறங்கும் இரவை
அடியோடு வெறுக்கிறேன்...
இருந்தாலும் - என்
மன பெட்டகத்தில்
நான் சேமித்து வைத்த
உன் குரல்கள்
இன்னும்
என் மனதோடு
பேசிக்கொண்டுதான் இருக்கின்றன !!!
என்னுள் வசிக்கும்
உன்னுடனான இரவுகளுடன்
என்றும் அமைதியாய்
நித்திரைபேன்...!!!
என் சேமிப்பு
வற்றும் முன் பேசிவிடு...
வெற்றிடமாய் வறண்டு போவதற்குள்...
கற்பனை நிறைந்த கவியுலகில்
நானும் கவிஞன் ஆக வாழ தேடினேன்...
பனித்துளி பார்வையில்
வரம் கொடுத்தாய்...
நானோ வார்த்தை பஞ்சத்தில்...
என் என்னமோ
கவிஞர்களுக்கெல்லாம் கவிஞனாய்
என்னை உயர்த்திட...
என்னுள் பதிந்த என் சகியே...
உன் பெயர் சொல்வாயா...
ஒரு வார்த்தையில்...
அவர்களை எல்லாம் வென்றிடுவேன்... நானும்
ஒரு(வரி) கவிஞனாக...
முகம் பார்க்கவில்லையே
என்ற ஏக்கம்
சிறிதும் இல்லை என்னிடம்...
உன் முகவறியாய் உன் குரல்...
உருவமில்லாமல்
ஒலித்து கொண்டு தான்
இருக்கிறது...
நொடி பொழுதில் மரணம் வெல்வேன்,
உன் ஓர புன்னகையால்...
புன்னைகைக்க நீ வருவாயா...
பிறவி போதாது
உன் தாக்கம் பொறுத்திட...
தேடுகிறேன்...
தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்...
கருவாய் என்னுள் இருக்கும் நீ..
உருவாய் எங்கு இருகிறாய்...!!!
என் ஒவ்வொரு சீண்டலும்
உன் மீதான என் நினைவு தூண்டல்கள்
என்னவோ உன்னை சீண்டும் போது
நான் என்னையே தட்டிக்கொள்கிறேன்
அவள் உன்னுடன்தான் இருக்கிறாள் என்று
எவ்வளவு வலித்தாலும்
உன் நினைவுகளே மருந்தாய்
உன் வைத்திய மருந்துக்காய்
மென்மேலும் வலிகளை தேடி நான்....
ம் செல்
உன் தூர பயணம்
என் நினைவு அளவை பெரிதாக்கிறது...
ம் சொல்
என் நினைவளவு எவ்வளவு விரிந்தாலும் அதை
உன்னால் நிரப்புவேன்...
உனக்குத்துணையாக உன்மனம்.
உன் மனதுக்கு துணையாக என் மனம்.
எனக்குதுணையாக..
நான் மட்டும்..
எனக்குள் இருக்கும்
என்னையெல்லாம்
எடுத்தெறிந்து கொண்டிருக்கிறேன்
உன்னைச் சேமிக்க
இடம் போதாததால்.....
வார்த்தைகளால் காயப்படுத்துவாய்..
கண்களால் மருந்திடுவாய்..
மருந்துக்கு ஆசைப்பட்டு
காயப்பட்டுக்கொண்டே இருக்கிறேன்
நான்..
காதல் என்பது
ஒருவித தாகம்
அதனால்தான் நான்
உன் நினைவுகளை
குடித்துக்கொண்டிருக்கின்றேன்...
பாலைவனத்தின் நீர் தேடுவதைப்போல் அன்பை தேடி வெகுதூரம் பயணித்து வெறும் காணல்கள் மட்டுமே கண்களை ஏமாற்றுகிறது
நீ சந்தோஷப்படும் தருணங்களில்
என்னை மறந்தாலும்
நீ கவலைப்படும் தருணங்களில்
என்னை நினை ...!
என் நட்பு உன் கண்ணீரை துடைக்க காத்திருக்கும்..!
நான் உனக்காக எழுதிய கவிதைகளை
உன்னை பிரிந்த பின் ஓர் பௌர்ணமி இரவில்....
மீண்டும் ஒரு முறை வாசித்தேன்....
உதடுகள் புன்னகைத்தது
என் கவிதைகளில் நீ என்
தோழனாயிருந்தாய்,
நீ தோழனாய் மட்டுமல்ல
நீ என் காதலனாயிருந்திருக்கிறாய்....என்று
மனது மட்டும்
அழுதுகொண்டே சொன்னது....!
என்னை விட என் கவிதைகள்
உன்னை காதலிதிருகின்றன....!