வெவ்வேறு திசைகளில் வாழும் நம் தமிழ் நண்பர்களின் சிறு சிறு கவிதைகள் இங்கு பகிர படுகிறது.
பாலைவனத்தின் நீர் தேடுவதைப்போல் அன்பை தேடி வெகுதூரம் பயணித்து வெறும் காணல்கள் மட்டுமே கண்களை ஏமாற்றுகிறது
நீ சந்தோஷப்படும் தருணங்களில்
என்னை மறந்தாலும்
நீ கவலைப்படும் தருணங்களில்
என்னை நினை ...!
என் நட்பு உன் கண்ணீரை துடைக்க காத்திருக்கும்..!
நான் உனக்காக எழுதிய கவிதைகளை
உன்னை பிரிந்த பின் ஓர் பௌர்ணமி இரவில்....
மீண்டும் ஒரு முறை வாசித்தேன்....
உதடுகள் புன்னகைத்தது
என் கவிதைகளில் நீ என்
தோழனாயிருந்தாய்,
நீ தோழனாய் மட்டுமல்ல
நீ என் காதலனாயிருந்திருக்கிறாய்....என்று
மனது மட்டும்
அழுதுகொண்டே சொன்னது....!
என்னை விட என் கவிதைகள்
உன்னை காதலிதிருகின்றன....!