கவிதை களம்

நண்பர்களின் கவிதைகள்

வெவ்வேறு திசைகளில் வாழும் நம் தமிழ் நண்பர்களின் சிறு சிறு கவிதைகள் இங்கு பகிர படுகிறது. 

நான் மட்டும்

சினேகிதி

உனக்குத்துணையாக‌ உன்மனம்.
உன் மனதுக்கு துணையாக என் மனம்.
எனக்குதுணையாக..
நான் மட்டும்..

சேமிப்பு

சினேகிதி

எனக்குள் இருக்கும்
என்னையெல்லாம்
எடுத்தெறிந்து கொண்டிருக்கிறேன்
உன்னைச் சேமிக்க
இடம் போதாததால்.....

காயம் 

சினேகிதி

வார்த்தைகளால் காயப்படுத்துவாய்..
கண்களால் மருந்திடுவாய்..
மருந்துக்கு ஆசைப்பட்டு
காயப்பட்டுக்கொண்டே இருக்கிறேன்
நான்..

தாகம்

சினேகிதி

காதல் என்பது
ஒருவித தாகம்
அதனால்தான் நான்
உன் நினைவுகளை
குடித்துக்கொண்டிருக்கின்றேன்...